அன்பான உலகை காணவில்லை!

 அன்பான உலகை காணவில்லை! 

(சங்கீத ஜாதி முல்லை காணவில்லை என்ற பாடல் மெட்டில்...)

அன்பான உலகை காணவில்லை!    அறிவு இருந்தும் அன்பு இன்றி அமைதி இல்லை!

அமைதியின்றி ஆனந்தம் இல்லை!  சாவொன்றுதானா நம் வாழ்வின் எல்லை?

ஆனந்தமே வா.....!

அன்பான உலகை காணவில்லை!    அறிவு இருந்தும் அன்பு இன்றி அமைதி இல்லை!

ஆனந்தம் வந்து சேருமோ?            அறிமுகம் செய்து விலகுமோ?          விழிகளில் துளிநீர் வழியுமோ?               அது சுடுவதை தாங்க முடியுமோ?

கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ....?

திரைகள் இட்டாலும் மறைக்கமுடியாது! அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது!

பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி! விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி திரைகளும் பொடிபட வெளிவரும் ஒரு ஒளி!

அன்பெனும் மழை வரும்!                         இனி எங்கும் சுகம் வரும்!

வறுமை வேதனை தீருமோ?                தேடிய சமத்துவம் பூமியின் வேதங்கள் ஆகிடுமோ மாறிடுமோ கூடிடுமோ?

அன்பு வழியே......!

நாம் தேடுகின்ற நல்லுலகம்  இதுதானோ? 

தினம் வாட்டுகின்ற சோகம் தீர வழி இதுதானே?

சுகம் இல்லை எனும்போது வழி வகுத்தாய்!

சுகம் வரும் என்றேதான் ஒளி கொடுத்தாய்! 

நெஞ்சில் என்றும் அன்பின் எண்ணம்! சிந்தும் கண்ணீர் அன்பால் போகும்! அன்பின் வழியே ஆனந்த உலகம்!  மண்ணுலகே என்றும் சொர்க்கம்! இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்! எல்லாம் மாறும் இதுவே உச்சம்! அன்பு வழியில் துன்பம் உண்டோ?      கண்டுகொண்டும் இன்னும் தயக்கமென்ன?

அன்பு மக்களே......! வாருங்கள்!            அன்பு வழியில் வந்து சேருங்கள்!                நல் உலகம் காண்போம் வாருங்கள்!

-------------------------------------------------------------------------



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1