இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்புவழி இன்ப ஒளி

அன்புவழி இன்ப ஒளி - 1  தீங்கு நினையா மனமே அன்பு! தீமைக்கெல்லாம் முதல் காரணமாக இருப்பது தீய எண்ணங்களே. ஆதலால் அன்பு செலுத்துவதற்கு முதல் தேவை தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதே.  _*மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற*_  ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை என்கிறார் திருவள்ளுவர்.  தீய எண்ணங்கள் எதனால் ஏற்படுகின்றன என்று அடுத்த கேள்வி எழுகிறது. அதற்கும் திருவள்ளுவர் பதில் சொல்கிறார்.   _*அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். _  *  பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும் என்கிறார்.  பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் இருப்பது என்பது அறம் என்பது மட்டுமல்ல. அதுவே தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அதனால் தீய செயல்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அடிப்படையாகும். அதுவே ஒருவர் அன்பு வழியில் வாழ்கிறார் என்பதற்கு...