இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாத்தான்குளம் சம்பவம் வருந்தத்தக்கது!

சாத்தான்குளம் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. போலீஸ்காரர்கள் தாக்குதலில் தான் இருவரும் இறந்தார்கள் என்று கருதுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது! உண்மையாக அப்படி நடந்திருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். போலீஸ்காரர்கள்  சட்டவிரோதமாக மனிதநேயமே இல்லாமல் இப்படி நடந்து கொள்வது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் மரணம் போலீஸ் லாக்கப்பில் இருந்தபோது நடக்கவில்லை! சிறைக்குச் சென்ற பிறகு நடந்துள்ளது! ஆதலால் இறப்பிற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள்  தெரிவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக குற்றவியல் மனுவாக வரிசைக்கு எடுத்துக்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டு மருத்துவ அறிக்கை கோரியுள்ளது. இதனிடையே காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கு வெள்ளிக்கிழமைக்கு போடப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை பரிசீலித்து உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடலாம். காவல் நிலைய மரணம், சிறைச்சாலை மரணம் குறித்து வழக்கு பதிவு செய்வது காவல் நிலைய வரம்புக்குள் வராது. உயர் நீதிமன்றம் அல்லது அரசு  விச...

மதமும் மனிதமும்

நேற்றைய பதிவில் மதம் தொடர்பான கருத்துக்கள் விடுபட்டு விட்டன. அதனை தெரிவிப்பதற்காக இதனை தற்போது பதிவிடுகிறேன். மதம் என்பது கடவுள், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு, மனிதர்களின் வாழ்வு குறித்த நம்பிக்கைகளாகும்! ஒரே கடவுள் என்பதும், பல கடவுள்கள் என்பதும், கடவுள் இல்லை, இயற்கை தான் மூலம் என்பதும், இயற்கை தான் கடவுள் என்பதும் அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது ஆகும்! நாத்திகம் உட்பட நமக்கு எம்மதமும் சம்மதம் தான்! கிருஷ்ணனோ அல்லாவோ, ஏசுவோ இயற்கையோ ஏதோ ஒன்று இறைவன்! ஆம்! 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்! அன்பே அனைத்திலும் ஜீவன்!' இதுதான் நமது மதம் சம்பந்தப்பட்ட கொள்கையாகும்! இங்கு குலம் என்று சொல்வது சாதியை அல்ல. மனிதகுலம் என்பதைக் குறிப்பதாகும். எம்மதம் ஆயினும் மனித நேயம்தான் அடிப்படை! மனித நேயத்துக்கு மீறிய மதம் இல்லை! மனிதநேயத்தை போற்றாத வளர்க்காத மதம் தீமையானது! மாற்று மதத்தினர் மீது வெறுப்புணர்ச்சியை வளர்கின்ற எந்த ஒரு மதமும் நெறிதவறி செல்வதாகவும், அதன் நோக்கத்திற்கு விரோதமாக செயல்படுவதாகவுமே கருதத் தக்கதாகும். மதங்களில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை! அது தோன்றிய பகுதிகளில் இருந்த சூ...

சாதியப்பிரச்சனை

அன்புமிக்க நண்பர்களே! சாதிய  ஏற்றத்தாழ்வுகள், மத மோதல்கள் சமுதாயத்தில் ஏற்பட கூடாது என்று நாம் விரும்புகின்றோம். ஆனால் சாதிய உணர்வும், மத நம்பிக்கைகளும் மக்களிடையே உள்ளது என்பதை நாம் மறுத்துவிட முடியாது! நீ அந்த சாதி நான் இந்த சாதி என்று நாம் சொல்லிக் கொண்டே இருக்கின்ற வரை சாதி எப்படி மறையும்! உன் சாதி அது என் சாதி இது என்று நாம் எல்லோரும் மனதில் எண்ணிக் கொண்டும் சொல்லிக்கொண்டும்  இருக்கின்ற வரை சாதி எப்படி மறையும்? ஒடுக்கப்பட்டு விட்டோமே என்று ஒரு பகுதியினர் ஆவேச படுகின்றனர். உயர்ந்திருந்த நம்மை ஒடுத்துகிறார்களே  என்று இன்னொரு பகுதியினர் பொருமுகின்றனர். இருதரப்பிலும் வருத்தங்கள் இருக்கின்றன. இரு தரப்பினருக்கும் உள்ள வருத்தங்களை உணராமல், இரு தரப்பிற்கும் இருக்கக்கூடிய வருத்தங்களை நீக்குவதற்கான இணக்கமான வழிமுறைகளை தேடாமல் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சாதிய காயங்களை கீறி கீறி ஆறாமல் பார்த்துக்கொண்டே இருந்தால் சாதி என்று தான் மறையும்? நாம் இருதரப்பினரும் பேதங்கள் ஏதுமின்றி அன்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகின்றோம்! நாம் நாளைய சமுதாயத்தில் ஆவுது சா...

வீட்டிற்கும் நாட்டிற்கும் தேவையானது அன்பின் ஆட்சி

வீட்டிற்கும் நாட்டிற்கும் தேவையானது அன்பின் ஆட்சி நமது அமைப்பிற்கு அன்பு வழி என்று பெயர் தெரிவு செய்துள்ளது ஏதோ ஒரு புதிய பெயர் வைக்க வேண்டும் என்று ஆழ்ந்த சிந்தனை இன்றி வைக்கப்பட்ட பெயர் அல்ல. அன்பு வழி என்பது தற்போதைய காலத்திற்கு பொருத்தமானதும் அவசியமானதும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நான் முன்பு செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு நண்பர்களின் அமைப்பிற்கு அன்பால் இணைவோம் நட்பால் உயர்வோம் என்ற முழக்கம் வைத்திருந்தோம். அது பெரிய யோசனைகளோடு வைக்கப்பட்டது என்று கூறிவிட முடியாது. ஆனால் அந்த அமைப்பின் கூட்டங்கள் நடக்கின்ற போது அதில் பேசுவதின் பொருட்டு அன்பு பற்றி அதிகம் படிக்கவும் எண்ணிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு அன்பின் ஆற்றல் புரியக் கூடியதாக இருந்தது. அன்பு இல்லாததன் காரணமாக, அல்லது உண்மையான அன்பு இல்லாததன் காரணமாக, அன்பு பற்றிய சரியான புரிதல் இல்லாததன் காரணமாக வீட்டிலும் நாட்டிலும் எவ்வளவு தவறுகள் நடக்கின்றன என்று தெரியவந்தது. நாம் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படவும், குறை படவும் கோபப்படவும், கடுஞ்சொல் பேசவும் பழக்கப்பட்ட அ...

அன்பே தெய்வம் காணொளி காட்சி

https://youtu.be/QXjmeug04xU

அன்பின் ஆட்சி - காணொளி காட்சி

https://youtu.be/CDlC2ZL2F70

அன்பு செய்க

அன்பு செய்க! இறைவன் உயிர்க்குலதிற்குக் கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்க்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று; அன்பே உயிர்க்குலத்தின் பாதுகாப்புக் கவசம், மானுடத்தில் உயிரியல் அடிப்பண்பு விரிந்து, வளர்ந்து வாழ்வது விரிவன எல்லாம் வாழும். சுருங்குவன எல்லாம் அழியும். தன்னலம் ஆக்கம் போலத் தோன்றும். தன்னலம் இன்பம் போலத் தோன்றும். ஆனால் இதனிலும் துன்பம் மற்றொன்று இல்லை. ஆதலால் அன்புடையவராக விளங்க, காண்பவர்கள் அனைவரையும் நேசித்த பிறகு கடைசியாக நம்மை நேசித்துக் கொள்ள வேண்டும். அதுவும் வாழ்தலுக்காகவேயாம். அன்பு இல்லையேல் பிறதுறைகளில் பெற்றவை அதாவது அறிவு யோகம் முதலியன கூட பயனற்றுப் போகின்றன. அன்பு இயற்கையாக அமைந்த ஒரு நியதி. நல் வாழ்க்கையின் வரிச்சட்டம், தாவரங்கள், விலங்குகள் இந்த அன்பு என்ற அடிப்படைச் சட்டதினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டதினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டத்திலிருந்து விலகிச் செல்கிறது. இது முற்றிலும் தவறு. பகுத்தறிவு நன்மையை வளர்க்கவே; தீமையை அகற்றவேயாம். மேலும் வ...

அன்பே தெய்வம்

'அன்பே தெய்வம்!' தொட்டால் சில நோய் ஒட்டிக்கொள்ளும்! கண்பட்டால் சிலநோய் தொற்றிக்கொள்ளும்! இதுவும் பார்த்தாலே தொற்றிக்கொள்ளும்! ஆனால் நோய் அல்ல! இது அழகிற்கு அழகு சேர்க்கும் நகைதான்! ஆனால் தங்கநகையல்ல. அது அன்பான புன்னகை! ஒரு புன்னகை ஓராயிரம் புன்னகையை பிறப்பிக்கும்! புன்னகைக்கு புன்னகையே பதிலாகும்! புன்னகைக்கு புன்னகையே பரிசாகும்! புன்னகைக்கு புன்னகையே நோயாகும்! புன்னகைக்கு புன்னகையே மருந்தாகும்! நீங்கள் புன்னகை பூக்க வேண்டுமானால், உங்கள் மனசு சுகமாக இருக்க வேண்டும்! உங்கள் மனசு சுகமாக இருக்க வேண்டுமானால், கவலை இல்லாமல் இருக்க வேண்டும்! கவலை இல்லாமல் இருக்க வேண்டுமானால், கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும்! கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டுமானால், இஷ்டமாய் வாழ வேண்டும்! இஷ்டமாய் நீங்கள் வாழ வேண்டுமானால், உங்கள் மனதில் அன்பு நிறைந்திருக்க வேண்டும்! ஆதலால், அன்பும் புன்னகையுந்தான் ஆனந்தத்தின் மார்க்கம் என்பேன்! அன்பை விதைத்தால் அன்பை விளையும்! எங்கும் விதைப்போம் அன்பை! இந்த மண்ணை நேசிப்போம்! வாழ்க வளர்க என்று வாழ்த்துவதை என்றும் மனதில் மந்திரமாய் ஜெபி...

அன்பு வழி பயணம்

அன்புமிக்க நண்பர்களே! இருட்டு இருட்டு என்று கூறிக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறப்பு என்று கூறுவார்கள் சான்றோர். நம்மைச் சுற்றிலும் சமூக அநீதிகள் பலவும் நடக்கின்றன. தனி மனிதர்களாக நாம் அதனை தடுப்பதற்கோ,  மாற்றுவதற்கோ சக்தியற்று இருக்கிறோம். ஆதலால், நாம் மௌன சாட்சிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போலே -நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? என்று பாடுகிறார் மகாகவி பாரதி.  ஆனால், நாம் அப்படித்தான் விழுந்து கொண்டு இருக்கிறோம். நமது சமுதாயம் நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்து காணப்படுகின்றது. நல்லவர்களும் முழு நல்லவர்கள் இல்லை. கெட்டவர்களும் முழு கெட்டவர்கள் இல்லை. மனிதர்களே கடவுள் பாதி மிருகம் பாதி என கலந்து செய்த கலவையாக தான் உள்ளார்கள். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்...