சாதியம் மறையுமா? - 7
சாதியம் மறையுமா? - 7 அம்பேத்காரின் மதமாற்ற முடிவு 1935 அக்டோபர் 13ல் இயோலாவில் நடந்த மாபெரும் மாநாட்டில் அம்பேத்கர் 'நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன்; ஆனால், நிச்சயமாக ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்’ என அம்பேத்கர் முழங்கியதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் விண்ணதிரக் கரவொலி எழுப்பித் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தார்கள். 'தான் எவ்வளவுதான் இந்துமதத்தில் இருந்துகொண்டு போராடினாலும், இந்த உயர்சாதி மக்கள் திருந்தப்போவதில்லை. தீண்டாமைக் கொடுமை ஒழியப்போவதில்லை. இந்து மதத்தில் இருக்கும்வரை என் மக்கள் தீண்டப்படாதவர்களாகவேதான் வாழப் போகிறார்கள்; சாகப்போகிறார்கள். தீண்டாமை அடிமை விலங்கிலிருந்து விடுவிக்கத் தன்னை நம்பியிருக்கும் இந்த மக்களைக் கண்டிப்பாக விடுவித்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி இந்து மதத்தில் இருந்து விடுதலை பெறுவதுதான் என்ற முடிவுக்கு அம்பேத்கர் வந்திருந்தார். அம்பேத்கரின் இந்த அறிவிப்பு தாழ்த்தப்பட்டவர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் அறிவிப்பு. அது நிச்சயமாக பார்ப்பனர் மற்றும் உயர்சாதி இந்துக்களின் மனங்களை உலுக்கும் என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஆனால், அம்பேத...