இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறப்பணியில் அப்துல் கலாம் 15.10.2020

  அறப்பணியில் அப்துல் கலாம் 15.10.2020 அறப்பணி நாளும் தொடரட்டும் ! அற்புதம் எங்கும் மலரட்டும் ! பொற்பதம் மண்ணில் பூக்கட்டும் ! இ ப்புவி போற்றி வணங்கட்டும் ! கலாம் கலாம் சலாம் சலாம் ! கல்வி சேவை தொடங் கலாம் ! கலாம் கலாம் சலாம் சலாம் ! காலம் எல்லாம் உழைக் கலாம் ! உறக்கத்தில் வருவது அல்ல கனவு ! உறங்க விடாது உண்மை கனவு ! உந்தன் உள்ளே இருக்குது சிறகு ! விரித்து அசைத்து பறந்து பழகு ! கலாம் கலாம் சலாம் சலாம் ! கனவுகளை நனவாக் கலாம் ! கலாம் கலாம் சலாம் சலாம் ! காலம் உன்னை வணங் கலாம் ! பிறப்பு என்பது சம்பவம் ! இறப்பு ஆகணும் சரித்திரம் ! உனக்கும் வரலாற்றில் ஒரு பக்கம் இருக்கு ! உலகம் படிப்பது உன் கையில்தான் இருக்கு ! கலாம் கலாம் சலாம் சலாம் ! அன்பை எங்கும் நிறைக் கலாம் ! கலாம் கலாம் சலாம் சலாம் ! ஆனந்தம் அமைதி படைக் கலாம் ! --------- இந்த அப்துல் கலாம் பிறந்த நாள் சந்திப்பில் சங்கமித்துள்ள அன்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம் என்று ஒரு வரியில் சபை வணக்கம் கூறி பேசுபொருள் குறித்து பேச விழைகின்றேன் ! யாரும் இதற்காக வருந்தாமல்...