இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்பு வழியில் செல்வோம்!

 அன்பு வழியில் செல்வோம்!         ஆனந்த வாழ்வு பெறுவோம்! நாம் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படவும், குறை படவும் கோபப்படவும், கடுஞ்சொல் பேசவும் பழக்கப்பட்ட அளவிற்கு அறிவுப்பூர்வமாக பொறுப்புணர்வோடு கோபப்படாமல் நிதானமாக திறந்த மனதோடு சிந்திக்கவும், ஆத்திரப்படாமல் ஆக்கபூர்வமாக பேசவும் பழக்கப் படவில்லை என்றே கூறலாம். ஆதலால் நாம் எதற்கெடுத்தாலும் சட்டு சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு திரும்பப்பெற முடியாத வார்த்தைகளை கொட்டி உறவுகளை சீர்குலைத்து துன்ப துயரங்களுக்கும் ஆளாகிறோம். அன்பில் சிற்றன்பு, பேரன்பு என இரு வகை உண்டு. சிற்றன்பு என்பது குறுகியது - சுயநலமானது. பேரன்பு என்பது பரந்துபட்டது - பொதுநலம் ஆனது. நமது உள்ளங்களில் சிற்றன்பைத்தான் நாம் நிறைய வைத்துள்ளோம். பேரன்பை மிகச்சிறியதாக வைத்துள்ளோம். ஆதலால் நாம் சமுதாயத்தில் காணப்படும் அநீதிகளை காணும்போது அதற்கு சின்ன வருத்தப் படுவதோடு வாய் சப்பலோடு நமது பொது நல விருப்பத்தை நிறைவு செய்து கொள்கின்றோம். அதற்குமேல் நாம் செய்ய என்ன உள்ளது என்று எண்ணிக் கொள்கிறோம். நமக்கு பேரன்பு இல்லை என்பதால்தான்அதை சரி செய்வதற்கான முயற்சி மே...

அன்பான உலகை காணவில்லை!

 அன்பான உலகை காணவில்லை!  (சங்கீத ஜாதி முல்லை காணவில்லை என்ற பாடல் மெட்டில்...) அன்பான உலகை காணவில்லை!    அறிவு இருந்தும் அன்பு இன்றி அமைதி இல்லை! அமைதியின்றி ஆனந்தம் இல்லை!  சாவொன்றுதானா நம் வாழ்வின் எல்லை? ஆனந்தமே வா.....! அன்பான உலகை காணவில்லை!    அறிவு இருந்தும் அன்பு இன்றி அமைதி இல்லை! ஆனந்தம் வந்து சேருமோ?            அறிமுகம் செய்து விலகுமோ?          விழிகளில் துளிநீர் வழியுமோ?               அது சுடுவதை தாங்க முடியுமோ? கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ....? திரைகள் இட்டாலும் மறைக்கமுடியாது! அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது! பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி! விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி திரைகளும் பொடிபட வெளிவரும் ஒரு ஒளி! அன்பெனும் மழை வரும்!                         இனி எங்கும் சுகம் வரும்! வறுமை வேதனை தீருமோ?    ...

அன்பு வழி இன்ப ஒளி 17

 17. குறள் கூறும் நற்பண்புகள்  மனிதனையும் சமுதாயத்தையும் செந்நெறிப்படுத்தும் ஒழுக்க நெறி அறம் எனப்படுகிறது. அறம் குறிக்கும் பொருள்கள் பலவெனினும் நற்பண்பு அல்லது ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பெரும்பாலும் அது வழங்கி வந்துள்ளது. குறளிலும் அப்பொருளே மேற்கொள்ளப்பட்டது. மனத்துக்கண் மாசிலனாதல் அறம் என்கிறார். அதாவது உள்ளத்தில் குற்றம் இல்லாமலிருத்தலே அறம் என்றுதுள்ளார். தனி மனிதன், குடும்பம் முதலியவற்றை மையமாகக் கொண்ட அறத்துப்பால் மனிதனின் தனி வாழ்க்கையை விளக்கி அன்பை வளர்த்து அறத்தைப் போற்றி மனத்தூய்மை பெற்று வாழும் வகையைக் கூறுகிறது. அறநெறியில் அழுத்தமான நம்பிக்கை உடைய வள்ளுவர் நூலின் அறம், பொருள், இன்பம் என்கிற முப்பாலிலுமே அறம் விரவி நிற்கிறது.  அறத்தால் வருவதே இன்பம்; அறத்தை மறத்தல் ஒன்றே ஒருவனுக்கு கேடு விளையப் போதுமானது; அறநோக்கை இடைவிடாது செல்லும் வாய் எல்லாம் செயல்படுத்தவேண்டும்; மற்றும் நன்மை மட்டுமே அன்றி தீமை இன்மையும் அறம் ஆகும். முடிவு நல்லதாக ஏற்படுமானால் அதை அடைவதற்குள்ள வழி தவறாக இருந்தாலும் அத்தவற்றைச் செய்யலாம் என்பதில் வள்ளுவருக்கு உடன்பாடு இல்லை; வழியும்...

அன்பு வழி இன்ப ஒளி 16

 16. குறள் கூறும் குற்றங்கள் சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் தம் சமுதாய வாழ்க்கையிலும் தனிமனித வாழ்க்கையிலும் பல குற்றங்களைச் செய்ய நேரிடுகின்றது. சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில் மக்கள் எவ்வெவ் குற்றங்களைச் செய்ய நேரிடுகின்றது என்றும், அவற்றால் எவ்வெவ்வற்றை இழக்க நேரிடுகின்றது என்றும் கூறுகின்றார். இதன் மூலம் சமுதாய மேம்பாட்டுக்கும் தனிமனித மேம்பாட்டுக்கும் வழி செய்கின்றார். அளவறியாது ஈதல், அறிவின்மை, அன்பின்மை, இறைவனை வணங்காமை, ஈயாமை, ஊக்கமின்மை, ஊன் உண்ணல், ஒழுக்கமின்மை, கல்லாமை, களவு செய்தல், கள்ளுண்ணல், காமத்தில் மயங்கல், கேள்விச் செல்வமின்மை, கொலைத்தொழில் செய்தல், சினம் கொள்ளல், சூதாடல், சோம்பல் கொள்ளல், தீச்சொல் கூறல், தீயன செய்தல், நடுவுநிலைமை தவறுதல், நல்ல நட்பை இகழ்தல், நல்லாரைத் துணைக்கோடாமை, நற்பண்புகளைக் காக்காமை, நன்றி மறத்தல், நாணமின்மை, பகுத்துக் கொடுக்காத செல்வம், பயனில் கூறல், பிறரை வருத்திச் செல்வம் தேடல், பிறர் பொருளைக் கவர நினைத்தல், பொருளல்லவற்றைப் பொருள் என்று உணர்தல், பொறாமைப்படல், மக்கட் பண்பு இல்லாமை, மறத...

அன்பு வழி இன்ப ஒளி 15

 15. தீயசெயல் செய்யற்க! தீய செயல் செய்யாமல் இருப்பதை வலியுறுத்துவதற்கு மகாத்மா காந்தியடிகள் மூன்று குரங்கு பொம்மையை வழங்கினார்; முதல் குரங்கு கண்ணை பொத்தியிருக்கும். இரண்டாவது  குரங்கு காதை பொத்தியிருக்கும்; மூன்றாவது குரங்கு வாயை பொத்தியிருக்கும். அதற்கு பொருள்:  தீயதை காணாதே; தீயதை கேளாதே; தீயதை பேசாதே என்பதாகும்.  தீயதை காணாமல், கேளாமல், பேசாமல் இருந்தால் போதுமா? தீயதை எண்ணாமல் இருந்தால் அல்லவா தீய செயல் ஏற்படாமல் இருக்கும்? எண்ணம் தானே செயலுக்கு மூலம்? தீய செயல் எண்ணாதே என்பதை ஏன் மகாத்மா வலியுறுத்த இன்னொரு இன்னொரு குரங்கை வைக்கவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே! அதற்கு ஒரு குரங்கு பொம்மை கிடைக்கவில்லையா? அல்லது அதனை வைக்க இடமில்லையா? அல்லது தீயதை எண்ணிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாரா?  என்றெல்லாம் கேள்வி எழலாம்.  ஆனால், தீயதை பார்க்காமல், கேளாமல், பேசாமல் இருந்தாலே எண்ணம் ஏற்படாது என்பதால் மகாத்மா அதற்கொரு பொம்மையை வைக்காமல் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மையான காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். பொதுவாக ஐம்புல நுகர்வுதான் எண்ணங்களுக்கு அடிப்படை. அத...