தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்
தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்
இருட்டு இருட்டு என அங்கலாய்த்துக்கொண்டு இருப்பதை விடுத்து ஒரு அகல்விளக்கை ஏற்றுவோம்!
வணக்கம் நண்பர்களே!
தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம் (TAVAM ) ஒரு சமூக வாழ்வியல் அமைப்பு; சாதி, மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அன்பு வழியில் வாழ்வதற்கு போதனையும் பயிற்சியும் வழங்கி, சமுதாயத்தில் அன்பும் அறமும் அமைதியும் நிலவ பாடுபடுவது இதன் நோக்கமாகும். அன்பு வழி மாமன்றம் என்பது இதன் சுருக்கப் பெயர். இந்த மன்றம் நேரு யுவ கேந்திரா முன்னாள் இயக்குநர் திரு வேலாயுதம் அவர்களால் நிறுவபட்டுள்ளது. அன்பு வழியில் அறப்பணிகள் செய்து நல்ல சமுதாயம் அமைய பாடுபட விரும்புபவர்கள் இந்த மன்றத்தில் இணையலாம்; ஒத்த கருத்துடைய உங்கள் நல்ல நண்பர்களையும் இந்த அன்பு வழியில் ஐக்கியமாக்கலாம்!
மன்றத்தின் கொள்கை திட்டங்கள்:
1. சமூகம்:
அ. மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்துதல்;
ஆ. அனைவருக்கும் இலவச கல்வி;
இ. நாட்டின் தேவைக்கேற்ப கல்வி, வேலைக்கான திட்டமிடல்;
ஈ. அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலை உத்தரவாதம்;
உ. சாதி மத மோதல் இல்லாத சாதி சமய சார்பின்மை;
ஊ. இயற்கைச் சூழலை பாதுகாக்கும் விதத்தில் நீர் மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை.
எ. அனைவருக்கும் இலவச மருத்துவம்.
2. அரசியல்:
அ. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை;
ஆ. பெண்களுக்கு அரசியலில் 50 சதவீத இட ஒதுக்கீடு;
இ. அமைதியான அறவழிப் போராட்டம் மூலம் கொள்கைகளை வலியுறுத்துதல்.
3. பொருளாதாரம்:
அ. இயற்கை விவசாயம் மற்றும் கிராம சுய சிறு தொழில்களை அடிப்படையாகக்கொண்ட சுதேசி பொருளாதாரம்;
ஆ. நில உச்சவரம்பு சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தி கிடைக்கும் உபரி நிலங்களையும், தரிசு நிலங்களையும் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கி கூட்டுறவு பண்ணை இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவது. இ. விவசாயத்திற்கு இலவச மின்சாரம், மற்றும் ஒருங்கிணைந்த பயிர் காப்பீடு;
ஈ. லஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை.
தன்னொழுக்க சமூகம், தற்சார்பு பொருளாதாரம் மற்றும் தன்னாட்சி அரசியல் மன்ற இலக்குகளாகும்.
இதில் சேர கூடியவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிகள்:
1. மது அருந்தக்கூடாது;
2. லஞ்சம் வாங்கக் கூடாது; கொடுக்கக்கூடாது.
3. வரதட்சணை வாங்கக்கூடாது; கொடுக்கக்கூடாது.
4. ஜாதிமத பாகுபாடு பார்க்கக்கூடாது.
5. மனிதநேயம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
6. இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு துணை புரிபவர்களாக இருக்க வேண்டும்;
7. அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை உரியவராக இருக்கவேண்டும்.
8. அனைவரிடமும் அன்பு கொள்ள வேண்டும்;
9. பெண்களை சமமாக மதிக்க வேண்டும்.
10. கொலை கொள்ளை வன்புணர்வு ஏமாற்றுதல் மோசடி செய்தல் போன்ற குற்றங்களை செய்யாதவர்கள் ஆக இருக்க வேண்டும்.
செயல் திட்டங்கள்:
1. அன்பு வழி வாழ்வியல் பயிற்சி அளித்தல்;
2. இளைஞர்களுக்கு வேலை மற்றும் தொழிற்பயிற்சி ஏற்பாடு செய்தல் ;
3. மாணவர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் பண்பாட்டு பயிற்சி அளித்தல்;
4. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு பாடுபடுதல்;
5. சமூக சேவை மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணி புரிதல்;
6. சட்ட விழப்புணர்வு, ஆலோசனை மற்றும் சேவைப் பணியாற்றல்;.
7. கலை இலக்கியப் பணியாற்றல்.
மேற்படி 7 வித பணிகளை தொடர்ந்து முன்னெடுத்தல் சமுதாயத்தில் அன்பும் அறமும் மேம்படுவது உறுதி. சமுதாயத்தில் அன்பும் அறமும் மேம்பட தொடங்கினால் சமூக முன்னேற்றம் ஏற்படுவதும் உறுதியாகும்.
ஆதலால், சமூக முன்னேற்றத்தில் ஆர்வம் உள்ள நீங்கள் ஒவ்வொருவரும் மன்றத்தின் 7 வித பணிகளில் ஏதேனும் ஒன்றில் ஈடுபடுத்திக் கொண்டு பாடுபட முன்வர வேண்டும் என்று எதிர்நோக்குகின்றோம்.
மன்றத்தில் இனிய விரும்புபவர்கள் பின்வரும் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்!

கருத்துகள்
கருத்துரையிடுக