அன்பு வழியில் செல்வோம்!
அன்பு வழியில் செல்வோம்! ஆனந்த வாழ்வு பெறுவோம்! நாம் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படவும், குறை படவும் கோபப்படவும், கடுஞ்சொல் பேசவும் பழக்கப்பட்ட அளவிற்கு அறிவுப்பூர்வமாக பொறுப்புணர்வோடு கோபப்படாமல் நிதானமாக திறந்த மனதோடு சிந்திக்கவும், ஆத்திரப்படாமல் ஆக்கபூர்வமாக பேசவும் பழக்கப் படவில்லை என்றே கூறலாம். ஆதலால் நாம் எதற்கெடுத்தாலும் சட்டு சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு திரும்பப்பெற முடியாத வார்த்தைகளை கொட்டி உறவுகளை சீர்குலைத்து துன்ப துயரங்களுக்கும் ஆளாகிறோம். அன்பில் சிற்றன்பு, பேரன்பு என இரு வகை உண்டு. சிற்றன்பு என்பது குறுகியது - சுயநலமானது. பேரன்பு என்பது பரந்துபட்டது - பொதுநலம் ஆனது. நமது உள்ளங்களில் சிற்றன்பைத்தான் நாம் நிறைய வைத்துள்ளோம். பேரன்பை மிகச்சிறியதாக வைத்துள்ளோம். ஆதலால் நாம் சமுதாயத்தில் காணப்படும் அநீதிகளை காணும்போது அதற்கு சின்ன வருத்தப் படுவதோடு வாய் சப்பலோடு நமது பொது நல விருப்பத்தை நிறைவு செய்து கொள்கின்றோம். அதற்குமேல் நாம் செய்ய என்ன உள்ளது என்று எண்ணிக் கொள்கிறோம். நமக்கு பேரன்பு இல்லை என்பதால்தான்அதை சரி செய்வதற்கான முயற்சி மே...