அன்பு வழி இன்ப ஒளி 15
15. தீயசெயல் செய்யற்க! தீய செயல் செய்யாமல் இருப்பதை வலியுறுத்துவதற்கு மகாத்மா காந்தியடிகள் மூன்று குரங்கு பொம்மையை வழங்கினார்; முதல் குரங்கு கண்ணை பொத்தியிருக்கும். இரண்டாவது குரங்கு காதை பொத்தியிருக்கும்; மூன்றாவது குரங்கு வாயை பொத்தியிருக்கும். அதற்கு பொருள்: தீயதை காணாதே; தீயதை கேளாதே; தீயதை பேசாதே என்பதாகும். தீயதை காணாமல், கேளாமல், பேசாமல் இருந்தால் போதுமா? தீயதை எண்ணாமல் இருந்தால் அல்லவா தீய செயல் ஏற்படாமல் இருக்கும்? எண்ணம் தானே செயலுக்கு மூலம்? தீய செயல் எண்ணாதே என்பதை ஏன் மகாத்மா வலியுறுத்த இன்னொரு இன்னொரு குரங்கை வைக்கவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே! அதற்கு ஒரு குரங்கு பொம்மை கிடைக்கவில்லையா? அல்லது அதனை வைக்க இடமில்லையா? அல்லது தீயதை எண்ணிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாரா? என்றெல்லாம் கேள்வி எழலாம். ஆனால், தீயதை பார்க்காமல், கேளாமல், பேசாமல் இருந்தாலே எண்ணம் ஏற்படாது என்பதால் மகாத்மா அதற்கொரு பொம்மையை வைக்காமல் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மையான காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். பொதுவாக ஐம்புல நுகர்வுதான் எண்ணங்களுக்கு அடிப்படை. அத...
கருத்துகள்
கருத்துரையிடுக