அன்பே தெய்வம்
'அன்பே தெய்வம்!'
தொட்டால் சில நோய் ஒட்டிக்கொள்ளும்!
கண்பட்டால் சிலநோய் தொற்றிக்கொள்ளும்!
இதுவும் பார்த்தாலே தொற்றிக்கொள்ளும்!
ஆனால் நோய் அல்ல!
இது அழகிற்கு அழகு சேர்க்கும் நகைதான்!
ஆனால் தங்கநகையல்ல.
அது அன்பான புன்னகை!
ஒரு புன்னகை ஓராயிரம் புன்னகையை பிறப்பிக்கும்!
புன்னகைக்கு புன்னகையே பதிலாகும்!
புன்னகைக்கு புன்னகையே பரிசாகும்!
புன்னகைக்கு புன்னகையே நோயாகும்!
புன்னகைக்கு புன்னகையே மருந்தாகும்!
நீங்கள் புன்னகை பூக்க வேண்டுமானால்,
உங்கள் மனசு சுகமாக இருக்க வேண்டும்!
உங்கள் மனசு சுகமாக இருக்க வேண்டுமானால்,
கவலை இல்லாமல் இருக்க வேண்டும்!
கவலை இல்லாமல் இருக்க வேண்டுமானால்,
கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும்!
கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டுமானால்,
இஷ்டமாய் வாழ வேண்டும்!
இஷ்டமாய் நீங்கள் வாழ வேண்டுமானால்,
உங்கள் மனதில் அன்பு நிறைந்திருக்க வேண்டும்!
ஆதலால், அன்பும் புன்னகையுந்தான்
ஆனந்தத்தின் மார்க்கம் என்பேன்!
அன்பை விதைத்தால்
அன்பை விளையும்!
எங்கும் விதைப்போம் அன்பை!
இந்த மண்ணை நேசிப்போம்!
வாழ்க வளர்க என்று வாழ்த்துவதை
என்றும் மனதில்
மந்திரமாய் ஜெபிப்போம்!
நேசத்தால் உள்ளம் கனியும்!
நேசத்தால் முகம் மலரும்!
நேசத்தால் கண்கள் ஒளிரும்!
நேசத்தால் வெறுப்பு தொலையும்!
நேசத்தால் பகைமை மறையும்!
நேசத்தால் யுத்தம் அழியும்!
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
அன்பே எங்கள் உலக தத்துவம்!
அழகை வெளிப்படுத்தும் எதையும்
கொண்டு வாருங்கள் என்று நான்கு
மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப்பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ
கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.
கேட்டபோது சொன்னாள்
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது.
செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன்.
அழகாய் இருந்தது.
சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன்.
தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”..
அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை
சொன்னார்
“அன்பு என்றால் இதுதான்”.
உங்களால் உலகிற்கு எதையேனும்
இலவசமாகக் கொடுக்க முடியும் என்று
நினைத்தால் அன்பைக் கொடுங்கள்...
ஏனெனில் உலகம் அதற்குத்தான்
அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது.
அழகான பணக்காரி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள். அவரிடம்..."என் வாழ்க்கையே ஒரு சூனியமாக இருக்கு".....!! "எவ்வளவோ செல்வம் இருந்தும் வெறுமையாக உணர்கிறேன்"....!!
அர்த்தமே இல்லாமல்.....,இலக்கே இல்லாமல்......,
"வாழ்க்கை இழுக்கிறது"....!!
"என்னிடம் எல்லாமே இருக்கிறது"......!!
இல்லாதது........,,, " நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே ".......!! என் சந்தோசத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.
கவுன்சிலிங் செய்பவர்...."
அவரின் அலுவலகத்தை சுத்தம் செய்யும் ஒரு பணி பெண்ணை அழைத்தார்".....!!
அவர் அந்த பணக்கார பெண்ணிடம்....., "
நான் இப்பொழுது என் வேலைக்காரப் பெண்ணிடம்
எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது "......என்று சொல்லச் சொல்கிறேன்..
"நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் "...... என்றார். பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு......., ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்.. " என் கணவர் மலேரியா காய்ச்சலால் இறந்தார்"....!
அடுத்த மூன்றாவது மாதம்..... "
என் மகன் ஒரு விபத்தில் இறந்து போனான்".....!!
" எனக்கு யாரும் இல்லை"....!! "எதுவும் இல்லை"....!!
"என்னால் உறங்க இயலவில்லை"......!!
"சாப்பிடக்கூட முடியவில்லை"......!!
"யாரிடமும் மனது விட்டு பேச"..., சிரிக்கவும் முடியவில்லை"....!!"
என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்"...... !!" ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது"....., "
ஒரு பூனை என்னை பின் தொடர்ந்து வந்தது"...... !
வெளியே சில்லென்று..... "மழை பெய்துக்கொண்டு இருந்தது ".......!!
"எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது".......!!
"அந்த பூனையை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்"..... !!மழையால் மிகவும் குளிராக இருந்ததால்.....,
" நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன்"......!!
அது அத்தனை பாலையும் குடித்து விட்டு.....,
" என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது".......!!
கடந்து போன 3 மாதத்திற்கு பிறகு......,
" நான் முதல் முதலாக புன்னகைத்தேன்^......!!
நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன்.
ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம்
என்னை சந்தோசப்படுத்துகிறது....., என்றால்.....
ஏன் இதை பலருக்கும் செய்து .....
"நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது"..... என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் பக்கத்து வீட்டு பாட்டிக்கு......," உண்பதற்கு சூடான கஞ்சி செய்து கொடுத்தேன்"...... !!
அந்த பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
"பாட்டியை மகிழவைத்து நான் மகிழ்ந்தேன்".....!!
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு சிறு, சிறு, உதவி செய்து........, "அவர்கள் மகிழ நானும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்".....!!
இன்று என்னை விட.... , நிம்மதியாக உறங்கவும்.....,
உணவை ரசித்து உண்ணவும்....... ,
"யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்".....!!
மகிழ்ச்சி என்பது........ ,
"அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது".......,
என்பதை கண்டு கொண்டேன்.
இதை கேட்ட அந்த பணக்கார பெண் விசும்பி, விசும்பி அழுதாள். அவளால் பணம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.
ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம்......மகிழ்ச்சி.
"அது அவளிடம் இல்லை"......!!வாழ்க்கையின் அழகு என்பது....... , எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீா்கள் என்பதில் இல்லை".....!! உங்களால்..... ," அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி ஆகிறார்கள். என்பதிலேயே இருக்கிறது".....!!
" மகிழ வைத்து மகிழுங்கள்"...!!
"இந்த உலகமும் , இறைசக்தியும் உங்களை கண்டு மகிழும்"......!!
50 பேர் கொண்ட ஒரு குழு ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டது.
திடீரென்று பேச்சாளர் நிறுத்தி ஒவ்வொரு நபரிடமும் ஒரு பலூன் கொடுத்தார்.
ஒவ்வொருவரும் ஒரு மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி அவரின் பெயரை எழுதும்படி கேட்டுக்கொண்டார்.
பின்னர் அனைத்து பலூன்களும் சேகரிக்கப்பட்டு மற்றொரு அறையில் வைக்கப்பட்டன.
இப்போது இந்த பிரதிநிதிகள் அந்த அறையில் அனுமதிக்கப்பட்டு 5 நிமிடங்களுக்குள் தங்கள் பெயரை எழுதப்பட்ட பலூனை கண்டுபிடிக்கும்படி கேட்டார்கள்.
எல்லோரும் வெளிப்படையாக தங்கள் பெயரை தேடி, தள்ளி, ஒருவருக்கொருவர் மோதினர்.
மற்றும் முற்றிலும் குழப்பம் இருந்தது.
5 நிமிடங்கள் முடிவில், யாரும் தங்கள் சொந்த பலூன்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போது ஒவ்வொருவரும் தோராயமாக ஒரு பலூன் சேகரிக்க மற்றும் அதன் பெயர் எழுதப்பட்ட நபரிடம் அதை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நிமிடங்களில் அனைவருக்கும் தங்கள் சொந்த பலூன் கிடைத்தது.
பேச்சாளர் ஆரம்பித்தார்:
இது நம் வாழ்வில் நடக்கிறது.
எல்லோரும் வெளிப்படையாக மகிழ்ச்சியை தேடுகிறார்கள்.
அது எங்கே என்று தெரியாமல்.மற்றவர்களின் மகிழ்ச்சியில் நம் சந்தோஷம் உள்ளது:
மற்றவர்களின் மகிழ்ச்சியில் நம் சந்தோஷம் உள்ளது.
அவர்களுக்கு அவர்களுடைய மகிழ்ச்சியை கொடுங்கள்.
நீங்கள் உங்கள் சொந்த மகிழ்ச்சியை பெறுவீர்கள்.
தீங்கு நினையா மனமே அன்பு!
தீயது சொல்லா சொல்லே அன்பு!
தீமை செய்யா செயலே அன்பு!
உதவ நினைக்கும் மனமே அன்பு!
ஆறுதல் தரும் வார்த்தை அன்பு!
சேவை புரியும் செயலே அன்பு!
அன்பின் வடிவே ஆண்டவன்!
அதற்கே தினமும் வேண்டவும்! (இறைவா...)
அன்பாய் இருக்கப் பழகினால்
அத்தனை மனமும் விரும்புமே!
உன்னைப்போலே பிறரையும் நினைத்தால்
எல்லா உள்ளமும் வாழ்த்துமே! (அன்பாய் இருக்கப் பழகினால்...)
எண்ணம் சொல் செயலாலே
யாருக்கும் துன்பம் செய்யாதே!
இயன்றால் நன்மை செய்திடுவாய்!
இல்லையென்றால் வாழ்த்திடுவாய்! (அன்பாய் இருக்கப் பழகினால்...)
அன்பே தவமாய் வாழ்ந்திட்டால்
உலகே அன்பு மயமாகும்!
உலகே அன்பாய் மாறிவிட்டால்
கலகம் எல்லாம் தீர்ந்துவிடும்! (அன்பாய் இருக்கப் பழகினால்...)
எடுப்பாரில்லை கெடுப்பாரில்லை
எல்லாம் எல்லாம் பெற்றிடுவார்!
அடிப்பாரில்லை வெடிப்பாரில்லை
ஆனந்தம் மட்டும் கண்டிடுவார்! (அன்பாய் இருக்கப் பழகினால்...)
அன்பு சேவை இரண்டுந்தான்
அகிலமெல்லாம் தேவைதான்!
இயன்ற மட்டும் செய்திடு!
இவ்வுலகில் என்றும் வாழ்ந்திடு! (அன்பாய் இருக்கப் பழகினால்...)
வாழ்க வளமுடன்!
வாழிய வையகம்! என எப்போதும் வாழ்த்துங்கள்!
வாழ்க வளமுடன் என்பது தனிமனிதனை வாழ்த்துவது!
வாழிய வையகம் என்பது உலகம் முழுவதையும் வாழ்த்துவது!
நாமும் வாழ வேண்டும்; நாடும் வாழ வேண்டும்!
வாழ்த்துவதால் வாழ்வு வளமாகுமா?
இது பலருக்கும் எழும் கேள்வி!
நீங்கள் மற்றவர்களை வாழ்த்துவதால்
மற்றவர் வாழ்வு வளமாகிறதோ இல்லையோ
உங்கள் வாழ்வு வளமாகும்!
ஏனென்றால் வாழ்த்துகின்ற நெஞ்சில் அன்பு குடிகொள்ளும்!
அன்பு குடி கொள்ளும் நெஞ்சில்
வெறுப்பு, விரோதம், குரோதம் தோன்றாது!
நற்குணம் ஏற்பட்டுவிட்டால்
தீமை உங்களை நெருங்காது!
ஆதலால், வாழ்த்துங்கள்!
எப்போதும் எல்லோரையும் வாழ்த்துங்கள்!
வாழ்த்திக்கொண்டே இருங்கள்!
வாழ்த்துவதால் மற்றவர் மனமும் மகழ்ச்சியடையும்!
மகிழ்ச்சியான மனநிலையில் செய்யும் செயல்கள்
வெற்றியை நல்கும்!
ஆதலால், வாழ்த்துவதால் மற்றவர்களுக்கும்
மகிழ்ச்சியே உருவாகும்!
ஆதலால், நம்பிக்கையுடன் வாழ்த்துங்கள்!
வாழ்க வளமுடன்!
வாழிய வையகம்!
இது ஒரு மந்திரம்!
சொல்லிக்கொண்டே இருங்கள்!
உங்களைச் சூழ்ந்துள்ள தீமைகள் விலகும்!
நடப்பவை எல்லாம் நன்மையாய் ஆகும்!

கருத்துகள்
கருத்துரையிடுக