காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

நாமக்கல் பொரசப் பாளையம் ஸ்ரீ விநாயகா குரூப் பள்ளிகளில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்


தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றமும், பொரசப் பாளையம் ஸ்ரீ விநாயகா குருப் பள்ளிகளும் இணைந்து நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் மாணவர்கள் கலை, இலக்கிய, அறிவுத்திறன் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது. மேற்படி பரிசளிப்பு விழா 6 10 2023 பிற்பகல் 2:30 மணி அளவில் தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கியது. மேற்படி பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாக அலுவலர் திரு.ப. முத்துசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்ற, ஶ்ரீ விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. S.P. மோகன் அவர்கள் தலைமை வகிக்க, தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற நாமக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திரு சிவிகை. சக்திவேல் அவர்கள் அறிமுக உரையாற்ற, துரோணா அகாடமி நிறுவனர் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. M. சிவராஜ் அவர்கள் ஊக்கவுரையாற்ற, நல்லிபாளையம் காவல் துறை சார்பு ஆய்வாளர் திருமதி. சாந்தி வாழ்த்துரை வழங்க, தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாநில இணைத் தலைவர் விடியல் குகன் (எ) கு. கருணாநிதி, மேனாள் மாவட்ட நீதிபதி அவர்கள் சிறப்புரை ஆற்ற, கலை அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் காலாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசளிக்கப்பட்ட பின், ஶ்ரீ விநாயகா பள்ளிக்கூட முதுகலை தாவிரவியல் ஆசிரியர் திரு. P. வேலுசாமி அவர்கள் நன்றியுரை ஆற்ற, மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்குப் பிறகு, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

https://youtu.be/HOfqv2sgSU0?si=x5xO65zxF4W5n2Ow


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1