பசுமை பூமி இயக்க தொடக்க விழா

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் காந்தி பிறந்த தின பசுமை பூமி இயக்க தொடக்க விழா

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் உள்ள தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்ற நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் 2.10.2023 காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மன்ற தலைவர் திரு டி. கே. தனசேகரன் அவர்கள் தலைமை தாங்க, மன்ற மாவட்டத் துணைத் தலைவர் திரு. N. இராமசாமி வரவேற்புரை ஆற்ற, விவசாய சங்கப் பொறுப்பாளர் திரு. வி பி கருணாநிதி, வழக்கறிஞர் திரு. கே மனோகரன் மற்றும் அகில இந்திய காந்திய இயக்க நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு. செந்தில் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, நடை பயண நாயகர். காந்தியவாதி திரு. ம. கருப்பையா அவர்கள் தொடக்க உரையாற்றி, விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, பசுமை பூமி இயக்கத்தைத் தொடங்கி வைக்க, மன்ற மாநில இணைத் தலைவர் திரு. விடியல் குகன் என்ற கு கருணாநிதி, மேனாள் மாவட்ட நீதிபதி தமிழ்நாடு அன்புமணி அறப்பணி மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்ற, மன்ற மாவட்டத் துணைச் செயலாளர் திரு. மாரிமுத்து நன்றி உரை நல்க தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

1. தொடக்கம்: 

 https://youtu.be/5mrePdv_DcY?si=oT2UF-zTi-xF7R9c 

 2. காந்திவாதி திரு. ம. கருப்பையா அவர்களின் பசுமை பூமி இயக்கத் தொடக்க உரை: 

 https://youtu.be/1nXD8nvSzTI?si=BR_Nwp9tMhfa21ai 

 3. விடியல் குகனின் கொள்கை விளக்க சிறப்புரை: 

 https://youtu.be/ehgdED-wf-0?si=9tYAoTmjvrKbWGTI

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1