தெற்கு மண்டல சந்திப்பு! 11.10.2020

 தெற்கு மண்டல சந்திப்பு!

11.10.2020



அன்புமிக்க தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாநிலக் குழு பொறுப்பாளர்கள் மற்றும்

மண்டல குழு பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


இன்று ஒரு சிறப்பான நாள்!


தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம் விரைவிலேயே பதிவு பெற்ற அமைப்பு ஆக உள்ளது. இந்த அமைப்பு போற்றுதலுக்குரிய அமைப்பாக வருங்காலத்தில் செயல்பட உள்ளது என்பது உறுதி!


ஏனென்றால் சில அமைப்புகள் அன்பை போதிக்கின்ற, உள்ளத்தை நல்வழிப்படுத்துகின்ற பணியை மட்டுமே செய்கின்றன. சில அமைப்புகள் சமூக சேவைகளில் மட்டுமே ஈடுபடுகின்றன. இன்னும் சில அமைப்புகள் விழிப்புணர்வு அளிக்கும் அறிவு பணிகளை மட்டுமே செய்கின்றன.


நமது அமைப்பு இம் மூன்று பணிகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளன. இம் மூன்று பணிகளும் ஒருங்கிணைந்த நடந்தால் தான் உண்மையான சமூக மறுமலர்ச்சி ஏற்படும். நமது அமைப்பு உண்மையான சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்பது திண்ணம்.


அன்பை போதிப்பதை எடுத்துக்காட்ட அன்பு வழியும், நாம் சமூக சேவை பணிகள் செய்ய உள்ளதை எடுத்துக்காட்ட அறப்பணியும் நமது அமைப்பின் பெயரிலேயே உள்ளன. அறிவொளி என்ற சொல்லும் நமது அமைப்பின் பெயரில் சேர்ப்பதற்கு உத்தேசம் இருந்தது. ஆனால் அமைப்பின் பெயர் நீளமாக இருக்கும் என்பதை அனுசரித்து அச்சொல் சேர்க்கப்படாமல் விடப்பட்டு விட்டது. நமது அமைப்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலட்சினையை பார்த்தால் அதில் அகல் விளக்கில் பிரகாசிக்கும் சுடர் அறிவொளியை குறிப்பதாகும். நான் சமூக விழிப்புணர்பு, சட்ட விழிப்புணர்பு, உடல்நலம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வை சமூகத்திற்கு வழங்க உள்ளோம். அன்பை போதித்து உள்ளத்தை வளப்படுத்த உள்ளோம். சமூக சேவைகள் புரிந்து சமுதாயத்திற்கு நற்பணிகள் பலப்பல செய்ய உள்ளோம். இத்தனையையும் நாம்தான் சேர்ந்து செய்ய உள்ளோம்.


இன்று தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நமது அமைப்பின் மாவட்ட குழுக்கள் உருவாகியுள்ளன. இனிமேல் ஒன்றிய கிராமிய குழுக்கள் அமைத்து நமது அமைப்பு விரிவுபடுத்தப்படவேண்டி உள்ளது. நமது அமைப்பு இல்லாத கிராமங்களே இல்லை என்ற அளவிற்கு எல்லா கிராமங்களிலும் நமது அமைப்பு உருவாக உள்ளது. எல்லா கிராமங்களிலும் அன்பு வழி பயிற்சி வழங்கி, அறிவு ஒளியை ஏற்றி, அறப்பணிகள் செய்ய உள்ளோம். நமது அமைப்பு மக்கள் மத்தியில் நற்பெயரை ஈட்டும் என்பதிலும், தமிழக வரலாற்றில் போற்றத்தக்க ஓர் அத்தியாயத்தை எழுத உள்ளது என்பதிலும் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால் இத்தகைய அமைப்பில் மாநில மண்டல பொறுப்பாளர்களாக நீங்களெல்லாம் உருவாகி உள்ளது மிகவும் பெருமை கொள்ளத்தக்க பேறு ஆகும். சாதனை வரலாற்றை படைக்க உள்ள நமது அமைப்பின் தெற்கு மண்டல பொறுப்பாளர்கள் சிறப்புமிக்க சாதனைகள் பல புரிய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்! நன்றி வணக்கம்!


                           ------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1